கணவன் வெளியூருக்கு சென்ற நிலையில், கள்ளகாதலனின் செயலால் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த இளம்பெண்

மத்தியபிரதேச மாநிலம் இண்டோர் நகரில் வசித்து வந்தவர் சுபம் ஷக்யா. இவரது மனைவி காஜல். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் குழந்தை இல்லை.

இந்நிலையில் காஜலுக்கு அதேபகுதியை சேர்ந்த நிகில் என்ற இளைஞருக்குமிடையே தகாத தொடர்பு இருந்துள்ளது.இதனை தொடர்ந்து சமீபத்தில் சுபம் ஷக்யா வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுள்ளார். மேலும் காஜலுக்கு துணையாக அவரது தோழி பூஜா உடன் இருந்துள்ளார்

இந்நிலையில் நிகில்,காஜலுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்காததால் ஆத்திரமடைந்த நிகில், காஜல் வீட்டுக்கு வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் கத்தியால் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காஜலின் தோழி பூஜா, அவரை அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு காஜலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைமாக உள்ள நிகிலை தேடி வருகிறார்கள்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.