உடனடியாக அகற்றவேண்டும்! உயர்நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு .!

சென்னை மெரினா கடற்கறைக்கு ஏராளமான மக்கள் வந்துசெல்லும் நிலையில், அங்கு ஏராளமான கடைகள் உள்ளன.

இந்நிலையில் ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது .

அப்போது, மெரினா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்பொழுது மெரினாவில், உரிமம் பெறாமல் 2000 கடைகள் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அவற்றை, அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம், ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்து, கடலோர விதிமுறைகளை மீறாமல் உணவகங்கள், மிதி வண்டி நிறுத்தும் இடம் அமைக்கிறோம் என்றும் கூறினார்.

அப்போது பேசிய நீதிபதிகள் உரிமம் இல்லாமல் உள்ள 2000 கடைகளை உடனே அகற்றுங்கள். இனிமேல், குறைவான எண்ணிக்கையில் மட்டும் உரிமம் கொடுங்கள். மேலும் நீங்கள் அமைக்க கூடிய உணவகங்கள், மிதி வண்டி நிறுத்துமிடங்களால், கடல் பாதுகாப்பு மண்டலத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது எனவிம் வலியுறுத்தினர்.

மேலும், கலங்கரை விளக்கத்திலுள்ள, மீன் சந்தை ஏன் அகற்றப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்து விவரமும் அடங்கிய விரிவான அறிக்கையை பிப். 1 ல் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி, வழக்கை, பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.