இலங்கையில் லபுக்கலை என்பது இராமாயண கால தொடர்புடைய ஊர் என்பது யாவரும் அறிந்ததே.
பல்வேறுபட்ட அதியங்களும் ஆச்சர்ய மிக்க இடங்களும் அவ்வூரில் நிறையவே காணப்படுகின்றது.
அந்தவரிசையில் வருட பிறப்பிலேயே ஊர் மக்கள் வியக்கும் விதத்தில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
புதுவருட பிறப்பை முன்னிட்டு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கள் வேலை எவ்வித பிரச்சனையு இன்றி அங்கே காணப்படும் கரகம் பாலிக்கும் இடத்தில் பூஜைகளை மேற்கொள்ள எத்தனிக்கும் போது குறித்த இடத்தில் ஓடும் ஆற்றில் கரை ஒதுங்கி காணப்பட்ட சிவலிங்கத்தை கண்டெடுத்துள்ளனர் அவ்வூர் மக்கள்.
கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அவ்விடத்திலேயே வைத்து பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர் அவ்வூர் மக்கள்.
இவ் அதிசய லிங்கத்தை பார்வையிட ஊர் மக்கள் உட்பட வெளி பிரதேசங்களிலிருந்தும் மக்கள் பார்வையிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.