டீன் ஏஜ் எனப்படும் பதின் பருவத்தை உடைய குழந்தைகளை சரியான முறையில் வழிநடத்துவது குழந்தைகளின் பெற்றோர்., அவர்களை சுற்றி அமைத்துள்ள சமூகம் மற்றும் அவர்களுக்கு நல்லறிவினை வழங்கும் பள்ளிகளின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.
இல்லங்களில் இருக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் முன்னிலையில் அந்த விஷயத்தில் ஒழுக்கத்தை கடைபிடித்து குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்., நமது குழந்தைகளின் சம வயதுடையவர்கள் மற்றும் ஒரே பாலினத்தை சார்ந்தவர்களுடன் தனிமையில் அவர்கள் அதிகநேரம் இருக்கும் வாய்ப்புகளை முடிந்தளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வயதில் அவர்களின் உடல் வலிமைக்கும்., அவரக்ளுக்கு தேவையான தன்னம்பிக்கை பயிற்சிகள்., உடற்பயிற்சிகளை கற்பித்து கொடுத்தால் அவசியம்., இந்த வயதுகளில் அவர்களின் தனித்திறமையை சோதித்து அதனை மேம்படுத்துவதற்கான வழிகளை செய்யும் பட்சத்தில்., அவர்களது தனித்திறன் வளர்ச்சியடையும்.
இந்த வயதில் பாலுணர்வு/காதல் ரீதியிலான உணர்வுகள் அல்லது ஆர்வங்கள் ஏற்படுவது வழக்கம். இயற்கையில் அது இயல்பான ஒன்றுதான்., அதன் பின்னால் அலைவது அவசியமற்றது என்று அவர்களுக்கு புரியும் வகையில் அமைதியாக அவர்களுக்கு கூறினால் அவர்கள் அதனை புரிந்துகொள்வார்கள்.
இரண்டாம் குழந்தை பருவத்தில் இருக்கும் அவர்களின் படிப்பில் ஈடுபாடு குறைதல்., தூக்கமின்மையால் அவதியுறுதல்., குற்ற உணர்வு மற்றும் அதிகளவு நெருக்கத்துடன் இருப்பது போன்ற பிரச்சனைகளால் அவர்கள் அவதியுறுவது போன்ற சந்தேகம் அல்லது அறிகுறிகள் தென்படும் பட்சத்தில்., அவர்கள் மீது அன்பு காட்டி பிரச்சனை குறித்து கேட்டறிந்து தீர்க்க ஆயத்தமாகுங்கள்.
எந்த விதமான சூழ்நிலையிலும்., நமது செயல்பாடுகளை பார்த்தே நமது குழந்தைகள் வளருவது வழக்கம்., அந்த வகையில் அவர்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்வதன் மூலமாக அவர்களது மனதிலும் இடம் பெற முடியும்., அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தாயார் மற்றும் தந்தை இருவருமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
இப்போதுள்ள உலகத்தில் அவர்களுக்கு எந்த விதமான பிரச்சனைகள் ஏற்பட்டாலும்., அதனை எதிர்த்து நின்று போராடும் மன பக்குவத்தை ஏற்படுத்துங்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்., எதிரிகளால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் நிலை ஏற்பட்டால் அவர்களது ஆயுதத்தையே வைத்து அவர்களை நம்மால் தாக்க முடியும்., அதற்கு முதலில் நமது மனது தயாராக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு புரியவையுங்கள்.