ஆணவக்கொலையின் உச்சக்கட்டம்: 16 வயது மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை!

பீகார் மாநிலத்தில் 16 வயது மகளை அவரது பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் ஆணவக்கொலை என்பது அதிகமாக நடந்து வருகிறது. 16 வயதான அஞ்சனா என்ற பெண்ணை கொலை செய்துள்ளது Gaya நகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 28 ஆம் திகதி காணாமல் போயுள்ளார் அஞ்சனா. ஆனால், அவரது தந்தை ஜனவரி 6 ஆம் திகதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அஞ்சனாவின் உடல் சிதைந்த நிலையில், அவரது வீட்டுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மார்பகம் அறுக்கப்பட்டும், ஆசிட் ஊற்றியும் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் அஞ்சனா. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின.

இதற்கிடையில், 28 ஆம் திகதி தனது தந்தை மற்றும் அவரது உறவினருடன் அஞ்சனா கடைசியில் வெளியில் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தனது மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுவிட்டதாக புகார் அளித்திருந்தாலும், இது ஆணவக்கொலை என தெரியவந்துள்ளதையடுத்து தந்தை மற்றும் தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வட இந்திய மாநிலங்களில் சாதி மீறிய காதல் திருமணங்களால் ஆணவக்கொலைகள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது.