ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பிரசவத்தின் போது ஆண் செவிலியர் வேகமாக குழந்தையை வெளியில் பிடித்து இழுத்துள்ளார்.
அப்போது குழந்தையின் உடல் பகுதி மட்டும் வெளியில் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செவிலியர், உடனே குழந்தையின் உடலை மறைத்து விட்டு, குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து கர்ப்பிணி பெண்ணை உடனடியாக ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார் கர்ப்பிணி பெண்ணின் கணவர். அங்கு குழந்தையின் தலை மட்டும் உள்ளே இருப்பதை பார்த்த மருத்துவர்கள், பெண்ணின் உறவினர்களுக்கு தெரியப்படுத்திவிட்டு அறுவை சிகிச்சை செய்து தலையை வெளியில் எடுத்தனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், பிரசவம் பார்த்த செவிலியர் போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த குழந்தையின் உடல்பகுதியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்