விழுப்புரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜா. அவர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவரது மனைவி சவிதா. இவரும் அதே பகுதியில் ஆயுதப்படை பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் முன்னாள் ஆயுதப்படை ஆய்வாளர் செல்வராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் நெடுஞ்செழியன், மேலும் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் பதவியை பயன்படுத்தி தனது மனைவி சவிதாவுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் தனது மனைவியின் தாலியை கையில் வைத்துக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்களால் தன்னோட வாழ்க்கையும் தனது குழந்தையோட வாழ்க்கையும் உயர் அதிகாரிகளால் சீரழிந்துபோனதாக பேசியுள்ளார்.
இணை தொடர்ந்து ராஜா கடலூர் மாவட்டத்துக்கும் இவரது மனைவி சவிதா கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் இடம் மாற்றப்படுவதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.