உசுப்பேத்தி உசுப்பேத்தியே இப்படி செய்ய வச்சுட்டாங்க!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘பேட்ட’.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘பேட்ட’ திரைப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது கூறியதாவது,

ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது தான் நடிகனின் கடமை , பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பேட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ரசிகர்களின் சந்தோஷமே என்னுடைய சந்தோஷம் என்று கூறுகிறார்.

அனைத்து பெருமையும் சன் பிக்சர்ஸ், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினரையே சேரும்.
கார்த்திக் சுப்புராஜ்தான் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு காட்சிகளையும், உசுப்பேத்தி உசுப்பேத்தி என்னை நடிக்க வைத்தார் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார்.