பொங்கலுக்காக…. இன்று மாலை முதல் தொடக்கம்..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பொங்கலுக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கபட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் முன்பதி செய்வதற்காக கோயம்பேட்டில் 26 கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு மையங்கள் ஜனவரி 9 முதல் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 14 வரை இந்த மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் இருந்து வெளியூருகளுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளில் 1.37லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து பொங்கலுக்கு மட்டும் 4 நாட்களுக்கு 14,423 சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதே போல, பிற மாவட்டங்களில் இருந்து 10,000க்கும் அதிகமான சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் நெரிசலின்றி செல்ல தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பயணிகளின் வசதிகாக, கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில் இருந்து, வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

எந்தெந்த ஊருக்கு எந்தெந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்ற விவரம் பின்வருமாறு:

மாதவரம் புதிய பேருந்து நிலையம் : ஆந்திரா மார்க்கம் செல்லும் அனைத்து பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் பேருந்து நிலையம் : ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் சானிடோரியம் : விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலையம் : திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

பூவிருந்தவல்லி( பூந்தமல்லி): வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.

பிற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.