ஹார்த்தாலுக்கு அஞ்சி சம்பந்தனிடம் சரணடைந்த ஹிஸ்புல்லாக்!

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மக்கள் ஒன்றியம் என உரிமை கோரப்பட்டு இந்த அழைப்பு வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று வரை ஜனநாயகத்தை காப்பாற்றிவிட்டதாக பெருமை கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தமிழர்களை ஏமாற்றி விட்டது.

குறிப்பாக தென்னிலங்கையின் மற்றைய கட்சிகள் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் கட்சி உறுப்பினர்கள் கொள்ளாத அக்கறையையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்தாக ரணில் ஆதரவாளர்கள் மெச்சிக் கொண்டிருக்கிறார்கள். ரணிலுக்கு வழங்கிய ஆதரவும் முக்கியத்துவமும் தமிழர்கள் மீது கூட்டமைப்பு வைக்க தவறியது ஏன் என்ற கேள்வி தற்போது சமூக ஆவர்வளர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுள்ளது.

அண்மையில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக M. L. A. M. ஹிஸ்புல்லாஹ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருக்கிறார். இந்த நியமனமானது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று மிக வெளிப்படையாக இனத்துவேசமான கருத்தினை வெளிப்படுத்தியிருந்தவர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ். தமிழ் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கினை இணையவிடாது. நிரந்தரமாக பிரிக்கும் சூழ்ச்சியான இனவாதக் கருத்தினை வெளிப்படுத்திய ஒருவரை ஜனாதிபதி மைத்திரி நியமித்திருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேனவின் கோபத்தின் வெளிப்பாடு தான் இதுவா என்றும் சந்தேகம் கொள்பவர்களும் உண்டு. இதற்கிடையில் தனக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வேண்டும் என்று M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் கேட்டுப் பெற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னமும் அரசியலமைப்பு மற்றும், அரசியல் தீர்வு விடையம் முற்றுப் பெறாமல், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தச் சூழலில், இருப்பதையும் இழக்கும் நிலையை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்புலம் அல்லது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஜனாதிபதியிடம் இப்போது வரை கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை.

குறிப்பாக மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை கிழக்கு தமிழர்களிடையே கொதி நிலையை தோற்றுவித்துள்ளது.

இனவாத சிந்தனை கொண்டு செயற்படும் ஒருவரை அதுவும் கடந்த காலங்களில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது இருப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை ஜனாதிபதி மைத்திரிகிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டமாவடியில் இந்து ஆலயத்தை அகற்றி அதில் கடைகளை அமைத்தது அதற்காக ஒரு நீதிபதியை தாமே இடம் மாற்றியதாக பகிரங்கமாக இனவாத கருத்தை கூறியிருந்தார் யாவரும் அறிந்தவுண்மை.

அதைவிட மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் போத்தல்களில் குடிநீர் நிரப்பு தொழில்சாலை அமைப்பதற்காக அப்பகுதி மக்களின் சம்மதம் இன்றி நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்ட விடயங்களும், காணிகள் கொள்வனவு ரிதிதென்ன பல்கலைக்கழகத்திற்கு சட்டவிரோதமான இயந்திரங்களை களவாடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒருவரை ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடாகவே நோக்கப்படுகிறது.

தொடர்பாக சில அதிருப்திகளும் பரவலாக புதிய ஆளுநர் மீது தமிழ்மக்களின் பார்வை உண்டு. இந்த விடயங்கள் தொடருமானால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் தற்போது உள்ள ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படுமோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.

இந்த காரணங்களால் மட்டுமே ஆளுநர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி பக்கசார்பாக செயல்படாத ஒருவரை கிழக்கு மகாண ஆளுநராக நியமித்து இருக்கலாம் என்ற கருத்து கிழக்கு மகாண தமிழர்கள்மத்தியில் உண்டு.

அது மட்டும் இல்லை, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேரடியாகவே ஹிஸ்புல்லாவை பற்றிய கருத்துக்களை சுட்டிக்காட்டியிருந்தார். ஒருவரின் கையை பிடித்து பொய் பேசுவதில் வல்லவன் ஹிஸ்புல்லா என்று அவர் பெய் பேசுவதில் வல்லவர் என்று தெரிவித்துள்ளார்.

இப்படியான ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்திருப்பது தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது ஒரு புறம் இருக்க இன்று எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஒரு வேளை நாளை நடக்கும் ஹார்த்தாலுக்கு நடுநடுங்கி சம்பந்தனிடம் சரணடைந்திருப்பாரோ என்பதும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப்படும் ஒரு கேள்வியாகும். பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும் என்னபதை..?