நண்பரின் மனைவியால் தகர்ந்த உலக கோடீஸ்வரரின் குடும்ப வாழ்க்கை!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் தமது மனைவி மெக்கின்ஸியை விவாகரத்து செய்துகொள்வதன் பின்னணியில் தொலைக்காட்சி நட்சத்திரம் லாரன் சான்சஸ் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட காதல் சொட்டும் குறுந்தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சி நட்சத்திரமான 49 வயது லாரன் சான்சஸ் உடனான நெருக்கமே தற்போது விவாகரத்துவரை கொண்டு சேர்த்துள்ளது.

இதனால் ஜெஃப் பெஸோசின் சுமார் 137 பில்லியன் சொத்தை பங்கு வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

49 வயது லாரன் சான்சஸ் உடனான நெருக்கம் பெஸோசின் 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையை தகர்த்துள்ளது.

லாரன் சான்சசை கடந்த 8 மாதங்களாக பெஸோஸ் காதலித்து வந்துள்ளார். இவரது முன்னாள் கணவர் பாட்ரிக் பெஸோசின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

தொலைக்காட்சி நட்சத்திரம் மட்டுமல்ல லாரன் சான்சஸ் திறமையான ஹெலிகொப்டர் விமானி எனவும் கூறப்படுகிறது.

வாரத்தில் மூன்று முறையேனும் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்துள்ளதாகவும், கடந்த ஆண்டின் கடைசி மாதங்களில் இருவரும் ஒன்றாகவே குடியிருந்தும் வந்துள்ளனர்.

மட்டுமின்றி பெஸோஸின் தனிப்பட்ட விமானத்தில் இருவரும் பல நாடுகளுக்கும் சென்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி பெஸோஸ் காதல் ரசம் சொட்ட லாரன் சான்சஸுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் தற்போது வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

நான் உன்னை காதலிக்கிறேன், உனது உடல் வாசத்தை நான் நுகர வேண்டும், எனது மூச்சாக நீ வேண்டும், உன்னை கட்டி அணைக்க வேண்டும், முத்தங்கள் பல தரவேண்டும் என பெஸோஸ் உருகியுள்ளார்.

பெஸோஸின் விண்வெளி நிறுவனத்திற்கான விளம்பர படப்பிடிப்பின்போது லாரன் சான்சஸின் அறிமுகம் பெஸோஸுக்கு கிடைத்துள்ளது.

அதன் பின்னர் இருவரும் தொலைபேசியிலும் நேரிடையாகவும் சந்தித்து தங்கள் நட்பை வளர்த்துக்கொண்ட நிலையில் அது பின்னர் காதலாக மாறியுள்ளது.