இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன. 12) தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த டி20 தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில், அடுத்து தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த வெற்றியை
இதனைத்தொடா்ந்து இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன 12) தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில், அந்நாட்டுக்கு எதிரான டி20 தொடரை சமநிலையிலும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய உற்சாகத்தில் உள்ளது. ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியா அணி, தனது சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இழந்துள்ளதால், அதற்கு பலி தீர்க்க ஆயுத்தமாகி வருகிறது.
எனவே இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.