பிரித்தானிய இளவரசர் சார்லஸின் ஞான மகன், ஒரு கடல் கன்னியை மணம் முடிக்க இருப்பதாக ராஜ வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
Mountbatten பிரபுவின் 100 மில்லியன் பவுண்டுகளுக்கு வாரிசான Nicholas Knatchbull, Ambre Saint-Clare என்னும் பெண்ணை மணக்க இருக்கிறார். Ambre கடல் கன்னியாக நடிப்பதில் புகழ் பெற்றவர் ஆவார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக Ambre தெரிவித்துள்ளார்.
Nicholasஇன் தந்தையான Earl Mountbattenஇன் ஞானத்தந்தை இளவரசர் பிலிப், Earl Mountbatten இளவரசர் வில்லியமின் ஞானத்தந்தை, Nicholasஇன் ஞானத்தந்தை இளவரசர் சார்லஸ்.
Nicholasக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நிச்சயமாகி நின்று போன நிலையில், இந்த கடல் கன்னி அவரை நிச்சயம் நட்டாற்றில் விட்டுச் செல்ல மாட்டார் என அவரது நண்பர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.