பிரித்தானியாவில் துணை மேயராக உள்ள 73 வயது நபர் 30களில் உள்ள அழகிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Cambridgeshire கவுண்டியின் மார்ச் நகரின் துணை மேயர் கிட் ஓவன் (73). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
ஓவனின் மனைவி கடந்த 2008ல் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த 30களில் உள்ள ஐசா என்ற அழகிய பெண்ணுடன் இணையதளம் மூலம் ஓவனுக்கு நட்பு ஏற்பட்டது.
பின்னர் போன் நம்பரை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டு வாட்ஸ் அப் மூலம் நெருக்கமாகி இருவரும் காதலிக்க தொடங்கினர்.
தன்னை விட அதிக வயது மூத்தவர் ஓவன் என்றும் பாராமல் ஐசா அவரை தீவிரமாக காதலித்தார்.
இதையடுத்து ஆசிய நாடான பிலிப்பைன்ஸிக்கே சென்று காதலியை சந்தித்தார் ஓவன்.
இந்நிலையில் இருவரும் நேற்று பிரித்தானியாவில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பின்னர் கணவன் – மனைவி இருவரும் முத்தம் கொடுத்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள்.