மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற உடனேயே திருநங்கை அப்சரா ரெட்டி நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா அதிமுக-வில் இருந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.
இதையடுத்து அவரை தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவித்தது காங்கிரஸ்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்சரா, தமிழக மக்கள் என்றும் ஹிந்தி கட்சியை ஏற்க மாட்டார்கள்.
பா.ஜ.க அரசு வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது. ரஜினிகாந்த் பா.ஜ.கவின் கைக்கூலியாக தான் செயல்படுகிறார்.
அரசியலுக்கு வருவேன், வருவேன் என ஏமாற்றுகிறார். மக்களை அவர் ஏமாற்றக்கூடாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.