பள்ளிக்கூடம் செல்லாமலே சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு வந்து விட்டது, ஆப்பு….!

தமிழக அரசு, தற்போது கல்வித் துறையில், பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இனி வரும் கல்வி ஆண்டிலிருந்து, அரசுத் துவக்கப் பள்ளிகளே கிடையாது, என்று அறிவித்துள்ளது.

ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரையில், ஒரே பள்ளியில் மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உருவாகி உள்ளது.

அதே போல், மாணவர்களின் சதவீதம் இல்லாமல், அதிக அளவில் வேலை பார்க்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதலும் அதிரடியாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திலும், பயோமெட்ரிக் என்ற, வருகைப் பதிவு இயந்திரம் பொருத்தப்பட உள்ளது.

பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்படும். அவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும், இந்த இயந்திரத்தில், வருகைப் பதிவினை செய்திட வேண்டும்.

அந்த இயந்திரத்தில், ஆசிரியர் பள்ளியில் வரும் நேரம், செல்லும் நேரம் அனைத்தும், துல்லியமாகப் பதிவாகி விடும்.

இதனால், பள்ளிக்கே வராமல், வெறும் கையெழுத்தைப் போடும் ஆசிரியர்களின் பாடு இனி திண்டாட்டம் தான்!