பணத்திற்காக மனைவியை கொலை செய்த கணவன்!

உசிலம்பட்டிஅருகே பொங்கல் பரிசுதொகை ஆயிரம் ரூபாயை தராததால் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கனவன் போலீசில் சரணடைந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியை சேர்ந்தவர் மாரிமத்து மகன் ராமர் (70). இவரது மனைவி ராசாத்தி (65). இருவரும் கூலி வேலை பார்த்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாயை ராசாத்தி நேற்று வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ராசாத்தி வாங்கி வந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கடன் கொடுத்தவர்கள் வந்து வாங்கிச் சென்றுள்ளனர். இதனால் ராமர் 1000 ரூபாய் பணம் எங்கே என கேட்டு ராசாத்தியிடம் வாக்குவாதம் செய்த நிலையில், இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமர் திடீரென தன் கையில் வைத்திருந்த அரிவாளால் ராசாத்தியை கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழுமலை போலீசார் ராசாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கொலை செய்த கனவர் ராமர் போலீசில் சரணடைந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எழுமலை போலீசார் மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பொங்கல் பரிசு தொகை 1000 இலவசம் என்ற பெயரில் பாமரமக்களை கொலையாளிகளாக மாற்றிவருவது குறிப்பிடதக்கது.