ஜேர்மனியில் கர்ப்பிணி பெண் ஒருவரை அகதி இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு மாயமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் அந்த கர்ப்பிணியின் பிறக்கவிருந்த குழந்தை பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் Bad Kreuznach மாவட்டத்தில் குறித்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் கடந்த வெள்ளியன்று அரங்கேறியுள்ளது.
சம்பவத்தின்போது அப்கான் அகதி இளைஞருடன் அந்த கர்ப்பிணி பெண்மணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கர்ப்பிணியின் வயிற்றில் பல முறை ஓங்கி குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
25 வயதான அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது நிலை அபாய கட்டத்தை கடந்துள்ளது என்றபோதும் அவரது குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தாக்குதலுக்கு பின்னர் அங்கிருந்து மாயமான 25 வயது ஆப்கானிஸ்தான் இளைஞரை கைது செய்த பொலிசார்,
அவர் மீது கொலை முயற்சி மற்றும் கொடூர தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டுமின்றி தாக்கப்பட்ட கர்ப்பிணிக்கும் குறித்த ஆப்கான் அகதிக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் பொலிசார் விசாரிக்க உள்ளனர்.
ஜேர்மனியில் தொடர்ந்து அகதிகளால் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.