தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் எப்போதுமே பிஸியாக இருப்பவர். இவரை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை இருந்துக்கொண்டே தான் இருக்கும்.
சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க பிரச்சனை காரணமாக சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றபோது நடிகர் விஷாலை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது நடிகர் விஷாலை காவல்துறையினர் கைது செய்வது போல் இணையத்தில் சில புகைப்படங்கள் வெளிவந்தது. இதை பார்த்த அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படம் விஷால் புதிதாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் என்று தெரிந்தபிறகு பரபரப்பு குறைந்தது. பலரும் இதை உண்மை என்றே நம்பிவிட்டனர்.
Unseen pics of Actor @VishalKOfficial pic.twitter.com/u9rF4AOwaH
— Ramesh Bala (@rameshlaus) 13 January 2019
இந்த புகைப்படங்கள் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் அயோக்யா படத்தின் காட்சிகள் என்று சினிமா விமர்சகர்களால் விளக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே விஷால் ரசிகர்களும் திருப்த்தி ஆனார்கள் என கூறப்படுகிறது.