நாட்டுக்கு துரோகம் செய்த ராணுவ வீரர் கைது!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்புடன் சமூக வலைத்தளம் வாயிலாக தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தொடர்ந்து உளவு பார்த்துவந்தனர். சுமார் நான்கு மாத காலம் நடைபெற்ற கண்காணிப்பைத் தொடர்ந்து, தற்போது அந்த வீரரை, ராஜஸ்தான் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அந்த வீரர், சமூக வலைத்தளம் மூலம் இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை ஐ.எஸ்.ஐ அமைப்புடன் பரிமாறியது கண்டுபிடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் சந்தித்து கூறியவை, ராஜஸ்தான் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராணுவ வீரர் தொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணைக்கு தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ராணுவம் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நொய்டாவில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர், அக்டோபர் மாதம் மீரட்டில் ஒரு வீரர் மற்றும் நவம்பர் மாதம் பெரோஸ்பூரில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து தகவல் பரிமாற்ற சாதனங்கள் கைப்பற்றப்பட்டது.