சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்…. பேரக்குழந்தையை பார்க்க முஸ்லீம் தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு!

பார்க்க பயமாக இருப்பதாக கூறி பிறந்த குழந்தையை பார்க்க முஸ்லீம் தம்பதியினருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வர்ஜீனியாவில் ஃபேர்ஃபாக்ஸ் பகுதியிலுள்ள மருத்துவனை ஒன்றில், தங்களுடைய பேரக்குழந்தையை பார்ப்பதற்காக முஸ்லீம் தம்பதியினர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

பார்வையாளர்களுக்கான நேரம் முடியும் தருவாயில் அவர்கள் வந்திருப்பதை பார்த்த, காவலாளி அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பிறந்த குழந்தையின் அத்தையான அர்வா சஹ்ர் என்ற பெண் சம்பவம் குறித்து பேசுகையில், நாங்கள் இருவரும் அந்த நேரத்தில் பார்த்த அணிந்திருந்தோம். எங்களை பார்த்ததும் அந்த காவலாளி, குழந்தையை காண்பதற்கு மறுப்பு தெரிவித்து காத்திருப்போர் அறையில் அமர வைத்தார்.

எங்களை பார்த்து அதிகமாக சத்தமிட்டார். உங்களுக்கு இங்கே அனுமதி இல்லை. உங்களுக்கு தெரியும், நீங்கள் பார்க்க பயமுறுத்தும் விதத்தில் இருக்கிறீர்கள் என மனம் நோகும்படி பேசினார் என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை அகமது ஜாஹ்ர் கூறுகையில், என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டு நான் காவலாளியிடன் எடுத்துக்கூறி கொண்டிருந்தேன்.

ஆனால் அவர் நான் கூறுவதை ஏற்கவில்லை. என்னுடைய அம்மா பேசுவதை காதில் வாங்காமல், உன் வாயை மூடு. இல்லையென்றால் உன்னை வெளியேற்றிவிடுவேன் என கூறினார்.

மேலும், உன்னை இங்கு யாரும் விரும்பவில்லை. செவிலியர்கள், டாக்டர்கள் என உங்களை யாரும் இங்கு விரும்பவில்லை எனக்கூறி காயப்படுத்தியதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதபடி பார்த்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.