சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலைகளை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை விலைக்கட்டுப்பாட்டு குழுவிடம் ஒப்படைப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்களின் கோரிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை 300 ரூபா முதல் 400 ரூபாவிற்கு இடையில் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை பல்வேறு பால்மா உற்பத்தி நிறுவனங்களும் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு கோரியுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனடிப்படையில் 1 கிலோ கிராம் பால்மாவின் விலையை 150 ரூபா முதல் 175 ரூபாவிற்கு இடையில் அதிகரிக்குமாறு கோரிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது,