பிரித்தானியாவில் முதன் முறையாக கருவுற்று குழந்தை பெற்றெடுத்த ஹைடன் கிராஸ் என்பவரின் போராட்ட கதைக்கு பின்னர் மீண்டும் சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப்படும் பெயராக மாறியுள்ளது ஜெய்டன் என்ற 5 வயது சிறுவனின் கதை.
பிரித்தானியாவின் முதல் திருநங்கை குடும்பம் என அறியப்படும் ஜொடி மற்றும் கிரேக் தம்பதிகளும் அவர்களது 5 வயது மகனுமே தற்போது ஊடகங்களின் விவாதப் பொருளாக மாறியுள்ளனர்.
பிறக்கும்போதே செவிடாக பிறந்த ஜெய்டன் ஓராண்டு முன்னரே அறுவைசிகிச்சை மூலம் கேட்கும் திறனை பெற்றார்.
முதன் முறையாக வாய் பேசவும் துவங்கியதும் ஜெய்டன் தமது தாயாரிடம் முதன் முதலாக கூறியது, தமது ஆண்களுக்கான உடை எதுவும் வேண்டாம் எனவும், ஒரு பெண்ணாக வாழ்ந்தால் போதும் என்பதே.
ஆனால் திருநங்கை குடும்பமான ஜொடி கிரேக் தம்பதிகள் தங்களது பிள்ளையையும் அதேபோன்று வளர்க்க முயற்சிப்பதாக கூறி ஒரு கும்பல் பிரித்தானிய அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
இதுவே பிரித்தானியாவின் முதல் திருநங்கை குடும்பம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான முதல் செய்தி.
ஜெய்டன் சிறுமிகள் போன்று உடையணிந்து குடியிருப்புக்கு வெளியே சென்றதை கவனித்த அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் விசாரணையில் புகார் பொய் என தெரியவந்தது என்றாலும், இணையத்திலும் சமூல வலைதளங்களிலும் இந்த குடும்பம் சிலுவையை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
5 வயது மட்டுமேயான ஜெய்டன் ரோஜர்ஸ் ஆணாக பிறந்து பெண்ணாக வாழ்ந்துவரும் பிரித்தானியாவின் மிகவும் வயது குறைவான நபராவார்.
ஜெய்டனின் இந்த மாறுதலை இதற்குள் அவரது உறவினர்களும் நண்பர்களும் ஆசிரியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.