தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை அவதூறாக பேசியதாக பெரும் சா்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் இந்திய அணியில் இருந்து சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து ஹா்திக் பாண்டியா தனது செயலுக்காக மன்னிப்பு தொிவித்தார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய ஹர்திக் பாண்டியா மட்டும் அல்லாது அவருடன் சென்ற கே.எல்.ராகுலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ நோட்டீஸ் அனுப்ப, அவரும் அவசர அவசரமாக மன்னிப்பு கடிதம் எழுதினார்.
ஆனாலும் பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருந்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி நெருக்கடியால் இருவரும் அணியில் இருந்து உடனடியாக சஸ்பேண்ட் செய்யப்பட்டு நாடு திரும்ப உத்தரவிட்டனர். விசாரணை முடியும் வரை இருவரும் கிரிக்கெட் தொடர்பான எவற்றிலும் பங்குபெறக்கூடாது என்பது உத்தரவாகும். இதனால் இருவரும் பேரதிர்ச்சியில் உள்ளார்கள்.
இவர்களுக்கு மாற்று வீரராக இந்திய கிரிக்கெட் அணியில் பஞ்சாப் அணியின் சுப்மான் கில் மற்றும் தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய அணியில் கொடிகட்டி பறந்த யுவராஜ் சிங்க் க்கு இன்ப அதிர்ச்சியான செய்தியாகும்.
ஏனெனில் பஞ்சாப் அணியில் யுவராஜுடன் இணைந்து விளையாடிய கில்லின் திறமையை பார்த்து வியந்த அவர், சில தினங்களுக்கு முன் 2019 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணிக்கு வருவார் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அவர் ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்க மாட்டார் என்றும் நீயூசிலாந்து தொடரில் களமிறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு யுவராஜ் வந்தது முன்னாள் கேப்டன் கங்குலியின் விருப்பம் ஆகும். அதேபோல கில் வருகையை யுவராஜ் சிங் எதிர்பார்த்திருந்தார். மேலும் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இந்திய அணி உலககோப்பை வாங்கிய தொடர்களில் இருவருமே தொடர்நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. கில் U19 சர்வதேச போட்டிகளில் 100 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.