சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் நாடு திரும்பிய அவர், வியத்மக அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.
அதில் அவர், இந்த ஆண்டு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்கும் என்றும், அதிபர் தேர்தல் நடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மக்கள் விரும்பினால், அதிபர் தேர்தலில் போட்டியிடும் சவாலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.