அனைத்து மதங்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்த விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கோட்டே கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய கலாநிதி இத்தப்பானே தம்மாலங்கார தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.