பெண்களை மயக்கி அறைக்கு அழைத்து வந்த நபருக்கு நேர்ந்த கதி!

மும்பையில் பெண்களை மயக்கி ஏமாற்றிவந்த நபர் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது விவகாரம் தொடர்பாக தனியார் நிறுவனர் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஐ.டி.சி.யில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஹரிநாராயண் குப்தா என்ற இளம் காவலாளி மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார்.

அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து பொலிசிற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அவரை கொலை செய்தது அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் லோரகுநாத் (46) என்பது தெரியவந்தது.

ஹரிநாராயண் குப்தா எம்.ஐ.டி.சி.யில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்களை மயக்கி தனது அறைக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது ஊழியர் லோரகுநாத்துக்கு அவர் மீது கோபத்தை உண்டாக்கியது. இது தொடர்பாக காவலாளியை அவர் கண்டித்து உள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் கோபம் அடைந்த லோரகுநாத் அவரை கொலை செய்துள்ளார்.