பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளும் தனக்கு பிறக்கவில்லை என கூறி முதல் மனைவியை விவாகரத்து செய்த தொழிலதிபரின் மூன்று பிள்ளைகளில் ஒருவரான ஜோயல் மிக உருக்கமாக பேசியுள்ளார்.
பிர்த்தானியாவில் ரிச்சர்ட்மேசன் என்பவர் பல ஆண்டுகளாக தான் வளர்த்து வந்த 3 மகன்கள் தனக்கு பிறக்கவில்லை என்பதை கண்டறிந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரிச்சர்ட் தற்கொலைக்கு முயன்ற நிலையில், பின் அதிலிருந்து மீண்டு விவாகரத்து செய்து தனது முதல் மனைவியான கேட்டிக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கினார்.
தொடர்ந்து எமாலூயிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்துவரும் அவர், கடந்த வாரம் இந்நிகழ்வுகள் குறித்து அனைத்தையும் வெளியிட்டார்.
இது குறித்து அவரது முன்னாள் மனைவியான கேட்டியின் மகன் ஜோயல் தற்போது தனது உணர்வை வெளிப்படுத்தி உள்ளான்.
அவன் கூறியதாவது, என்னுடைய ”அப்பா” ரிச்சர்ட் மேசன் தான். எனக்கு வேறு யாரும் அப்பா இல்லை. உண்மையான அப்பா என்று குறிப்பிடும் நபர் இன்னொருவர் இருக்கலாம் ஆனால் அது பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளான்.
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக என்னிடம் அப்பா பேசவில்லை. ஆனாலும் அவர் சிறந்தவர் என்றும் சிறந்த முன்மாதிரி என்றும் கூறியுள்ளான்.