“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், முதலாம் வட்டார மானாவெள்ளை வீதி “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கைகள்… (படங்கள் & வீடியோ)
“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின் நிதி உதவியுடன், புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் (புங்குடுதீவு ஆரம்பமான மடத்துத்துறையில்) உள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, முன்னாள் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை”, ஒருமாதத்துக்கு முன்னர் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களினால் வயலூர் முருகன் ஆலயம் தாண்டி, கமலாம்பிகை வித்தியாலம் வரை மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை தொடரப்பட்டு இருந்தது நீங்கள் அறிந்ததே…
இருப்பினும் தனிப்பட்ட ஒருசிலரால் இடையில் ஏற்பட்ட தரக்குறைவான பொய்யான விமர்சனத்தைத் தொடர்ந்து, சுவிஸ் ஒன்றியத்தின் செயற்பாடுகளில் தொய்வுநிலை ஏற்பட்ட போதிலும், தைப்பொங்கலுக்கு முன்னர் எமது நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டுமெனும் நிலையில் “மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன் அவர்களுடன் மேற்கொண்ட பலகட்ட உரையாடலைத் தொடர்ந்து மீண்டும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
இதன் அடுத்தகட்டமாக, புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் உள்ள “நண்பர்கள் சனசமூக நிலையத்தின்” மைதானம் அமைந்துள்ள பகுதியான புங்குடுதீவு நான்காம் வட்டாரமான இறுப்பிட்டி பகுதியின் மானாவெள்ளை வீதி (அடைகாத்தகுளம்) மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கையை, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றையதினம் வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் வழிகாட்டலில் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” மேற்கொண்டு உள்ளோம்.
புங்குடுதீவு முதலாம் வட்டாரமான பகுதியில் இருந்து இறுப்பிட்டி வீதிக்கு செல்லும் பகுதியின் மானாவெள்ளை வீதி (அடைகாத்தகுளம்) பகுதிக்கு பத்து மின்விளக்குகளையும், பெருங்காட்டு சந்தியில் இருந்து இறுப்பிட்டி வீதியில் நண்பர்கள் சனசமூக நிலையம் வரை ஐந்து மின்குமிழ்களும், (ஏற்க்கனவே புங்குடுதீவு தனியார் பஸ் சங்கம் இப்பிரதேசத்தில் மின்விளக்கு பொருத்தி உள்ள போதிலும், மின்விளக்குகளுக்கான இடைவெளி அதிகரித்து காணப்படுவதன் காரணமாக இது பொறுத்தப்பட்டது.) அத்துடன் சமுர்த்தி வீதி எனும் வீதியில் ஐந்து மின்குமிழ்களும், என மொத்தமாக இருபது மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது.
புங்குடுதீவு உலக மையத் தலைவர், இறுப்பிட்டி சனசமூக நிலைய செயலாளர், புங்குடுதீவு அம்பாள் விளையாட்டுக் கழகத் தலைவர் ஆகிய “சமூக ஆர்வலர்” திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (அண்ணா சின்னத்தம்பி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான திருமதி.த.சுலோசனாம்பிகை, பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்க உறுப்பினர்களும், ஜெர்மனியில் இருந்து புங்குடுதீவை சேர்ந்த சமூக ஆர்வலரும், நண்பர்கள் சனசமூக நிலையத் தலைவர் திரு.இராசலிங்கம் குகசீலன் (தம்பா), புங்குடுதீவு j/28மல்லிகை மகளிர் சங்கம் தலைவி திருமதி சவுந்தரா வசந்தகுமார் மற்றும் நண்பர்கள் சனசமூக நிலைய உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.
புங்குடுதீவு “நண்பர்கள்” சனசமூக நிலையத்தால், “சமூக ஆர்வலர்” திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (அண்ணா சின்னத்தம்பி) மூலம் தரப்பட்ட விண்ணப்பக் கடிதத்தை “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம்” அதாவது அதன் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் ஒப்படைத்ததின் காரணமாக இருவாரத்துக்கு முன்னர் அவரது தலைமையில் கூடிய “சுவிஸ் ஒன்றிய” நிர்வாக சபையானது, “இதனை உடனடியாக மேற்கொள்வதெனவும், இதுக்குரிய நிதியை அப்பிரதேச மக்களிடம் கேட்பதெனவும்” முடிவெடுத்து இருந்தோம்.
இதன் எதிரொலியாக “இதனை உடன் செய்யுமாறும், இதுக்குரிய நிதியை “சுவிஸ் ஒன்றியம்” தருமென” சொன்னதுடன், சுவிஸில் அப்பிரதேச உறவுகள் சிலரிடம் சுவிஸ் ஒன்றிய தலைவர் சுவிஸ்ரஞ்சன் அவர்கள் உரையாடியதன் நிமித்தம், சுமார் 50குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியான, பெருங்காட்டு சந்தியில் இருந்து, நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானம் வரையான இறுப்பிட்டி செல்லும் “மானாவெள்ளை வீதி” (அடைகாத்தகுளம்) பகுதி உட்பட இன்றைய அனைத்து “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கைக்கான முழுச்செலவையும்….,
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் சூரிச் மாநிலத்தில் வதியும் சிவாஸி எனும் திரு.ஆறுமுகம் பிரசாத் குடும்பத்தினரும், புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், சுவிஸில் புர்கடோர்ப் மாநில ஒபேர்புர்க் பகுதியில் வதியும் “ஒபேர்புர்க் குமார்” எனும் “சுவிஸ் ஒன்றிய” ஆலோசனை சபை உறுப்பினரான திரு.வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார் குடும்பத்தினரும் பொறுப்பேற்று உள்ளனர் என்பதை அனைவருக்கும் மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
எமது வேண்டுகோளை சிரமேற்கொண்டு கடமையாற்றிய திரு.இ.இளங்கோவன் அண்ணர் அவர்களுக்கும், “நிதி இல்லாவிடின் எதுவும் நடவாது” என்பதை உணர்ந்து, நாம் கேட்டவுடனேயே இதுக்குரிய முழுமையான நிதிப் பங்களிப்பையும் வழங்கிய திரு.பிரசாத் (சூரிச் சிவாஸி) குடும்பத்துக்கும், திரு.கிருஷ்ணகுமார் (ஒபேர்புர்க் குமார்) குடும்பத்துக்கும், பல வேலைப்பளுவுக்கு மத்தியிலும், எமது வேண்டுகோளை ஏற்று, அல்லும்பகலும் செயல்பட்ட திரு.பிள்ளைநாயகம் சதீஷ் அவர்களுக்கும், அங்கு சென்று பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்த பிரதானிகள் அனைவருக்கும், பொதுமக்களுக்கும், நண்பர்கள் சனசமூக நிலையத்தின் நிர்வாக சபைக்கும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பிலும், புங்குடுதீவு மக்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”
இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
14.01.2019
*** இன்றைய மின்விளக்கு பொருத்தும் நிகழ்வின் முழுமையான வீடியோ கிடைக்கப் பெற்றதும் பதிவேற்றம் செய்யப்படும்…
(மேற்படி வீடியோவில் நேற்றையதினம் புங்குடுதீவு அமபலவானார் அரங்கில் நடைபெற்ற “பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின்” கலந்துயாடலில் திரு.இ.இளங்கோவன் அவர்கள் ஆற்றிய உரையின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு உள்ளது)