அமெரிக்காவில் 2 வருடங்களுக்கு முன் இறந்த மகன் ஆவியாக வீட்டின் சமையலறைக்கு வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 57 வயதான ஜெனிஃபர் ஹாட்ஜ் என்கிற தாய் தன்னுடைய 21 வயதான மகள் லாரனுடன் டிவி பார்த்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையில் கிடந்த செல்போனில் அறிவிப்பு வந்தது. அதில் ஒரு நபர் சமையலறைக்குள் நுழைந்திருப்பதாக கூறியது.
அதனை பார்த்த லாரன், அம்மா அதில் ஒரு நபர் இருக்கிறான்… அது ராபி எனக்கூறியுள்ளார்.
இதனையா கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், அதில் இருந்த மனிதனின் தாடி தன்னுடைய மகனுடையதை போல இருந்ததால், வேகமாக சமையலறைக்கு ஓடியுள்ளார்.
ஆனால் அங்கு மகன் வந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. மாறாக அந்த காட்சி சிசிடிவியில் மட்டும் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து ஜெனிஃபர் கூறுகையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு நவம்பர் 29, 2016 என்று என்னுடைய மகன் ராபி (23) அதிக ஊக்கமருந்து உட்கொண்டதால் இறந்துவிட்டான்.
அவன் சமையலறைக்குள் நுழையும்போது ஒரு வித இரைச்சல் ஏற்பட்டது. இது மிகவும் வித்யாசமான சம்பவம். இதற்கு முன்பு இப்படி பார்த்ததில்லை. ராபி மிகவும் நல்ல குணம் கொண்டவன் தான். ஆனால் எனக்கு இன்னும் அந்த அதிர்ச்சி இருக்கிறது.
“இப்போது அவர் பரலோகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதை எனக்கு தெரியப்படுத்தியதைப் போல் நான் இதை உணர்கிறேன்.
“இது எனக்கு ஆறுதல் தருகிறது, ஆனால் நான் இன்னும் வித்தியாசமாக தான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.