13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சுவிஸ் அரசியல்வாதி…

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் 13 வயது சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொண்டதுடன் நிர்வாண புகைப்படம் கோரிய அரசியல்வாதிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் கவுன்சிலரும் பாடசாலை ஆசிரியருமான 37 வயது Michael Hugentobler என்பவரே பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ளவர்.

சமூக வலைதளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் போலியான பெயரில் 13 வயது சிறுமி ஒருவருடன் இவர் சேட் செய்துள்ளார்.

நட்பாக பழகிய சிறுமியிடம் ஒருகட்டத்தில் அந்தரங்க கேள்விகள் கேட்க துவங்கியுள்ளார் மைக்கேல். ஆண் ஒருவரை நிர்வாணமாக பார்த்ததுண்டா என்பது போன்ற கேள்விகளை கேட்டுள்ளார்.

பின்னர் இணைய கமெராவில் தாமே நிர்வாணமாக அந்த சிறுமி பார்க்கும் மட்டும் ஆபாச செய்கைகளிலும் ஏற்பட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் அந்த சிறுமியையும் இவர் நிர்வாணமாக கமெராவில் தோன்றும்படி நிர்பந்தித்துள்ளார். பின்னர் அவரது நிர்வாண புகைப்படங்களை கேட்டு தொல்லை செய்துள்ளார்.

குறித்த சிறுமி அவரது குடியிருப்பில் தனியாக இருக்கும் நாட்களில் மட்டும் மைக்கேல் இந்த துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே மைக்கேல் 13 வயது சிறுமி என கருதி ஆபாச செய்கைகள் மேற்கொண்டது மாறுவேடத்தில் விசாரணையில் ஈடுபட்டு வந்த பொலிஸ் அதிகாரி என்பது தெரியவந்தது.

மைக்கேல் பலமுறை சிறுவர்களை இதுபோன்ற துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியது அவர் மீதான விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி சில சிறுவர்களிடமும் ஆபாசமாக பேசியுள்ளதுடன் தமது ஆணுறுப்பு புகைப்படத்தையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அவருக்கு 180 நாட்கள் தலா 100 பிராங்குகள் வீதம் அபராதம் விதித்து மண்டல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.