இலந்தை என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம்.
100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.
இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது.
இலந்தை பழத்தில் மட்டுமல்லாமல், இலந்தை இலையிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. தற்போது அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
- உடலில் கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து போகும். இதனால் லேசாக கீழே விழுந்தாலும் கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும்.
- பித்தம் அதிகரித்தால், தலைவலி, மயக்கம், தலைசுற்றல் என பல பிரச்சனைகள் உண்டாகும். இந்த பித்தத்தை குறைக்க இலந்தைப்பழம் சாப்பிட்டால் போதும். பித்தம் குறையும்.
- நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் சரியாகும்.
- உடல் வலியை போக்கி உடலை வலுவாக வைத்துக்கொள்ள இலந்தை பழம் சாப்பிடுவது சிறந்த மருந்தாக அமையும்.
- பசியின்மை மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக இலந்தை உள்ளது. இலந்தையின் விதையை நீக்கிவிட்டு பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.
- மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை குறைக்கவும், உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழம் பயன்படுகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த பழங்களை சாப்பிடலாம்.
- மந்த புத்தி உள்ளவர்கள் இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை புத்துணர்சி பெறும். இதனை பகல் உணவிற்கு பின்னர் சாப்பிட வேண்டும்.
- மூளை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதுடன், உணவு, சிறுநீர்ப்பாதை மற்றும் சுவாசப் பாதையில் தோன்றும் வறட்சியை நீக்கி, புண்களை ஆற்றி, உடலுக்கு குளிர்ச்சியையும் தருகின்றன.
- இலந்தைப் பழ இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.