உயிர் தோழிகளாக இருந்த இரண்டு இளம்பெண்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களது பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும், சபித்ரி பரிடா (27) மோனலிசா நாயக் (28) ஆகிய இரண்டு பெண்களும், கடந்த பல வருடங்களாக தோழிகளாக இருக்கின்றனர். மேலும் கல்லூரி காலத்தில் இருந்து தற்போது பணியாற்றும் அலுவலகம் வரை ஒன்றாகவே இருந்த இவர்கள், கட்டாக் பகுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேலும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று தீர்ப்பு அளித்த நிலையில், சபித்ரியும், மோனலிசாவும் தற்போது அரசு வக்கீல் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் இவர்களில் திருமணத்தை இவர்களது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் கடும் உதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எங்களை பிரிக்க முயன்றால் நாங்கள் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.