பணத்திற்கு ஏற்ப கோவம் தீர்த்து கொள்ளலாம்!

சீனாவில் கோவம் தீர்த்துக்கொள்ள அந்நாட்டைசேர்த நபரால் பொருட்களை அடித்து உடைக்கும் விரோத கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த ஜின் மெங் என்ற நபர் ஒருவர்ஆங்கர் ரூம் (anger room) ஒன்றை துவங்கி உள்ளார்.

அது என்ன ஆங்கர் ரூம் என்று பலருக்கு கேள்விஎழலாம். அதன் சிறப்பே நமக்கு கோவம் வரும் போது பல பொருட்களை உடைக்க வேண்டும் என்றுதோன்றும் அப்படி தோன்றும் நபர்களுக்கு இங்கு வந்தால் போதும். தான் வழங்கும் பணத்திற்குஏற்ப எத்தனை பொருட்கள் வேண்டுமானாலும் உடைத்து கொள்ளலாம்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஜின் மெங்கு கூறும் போது. இந்த அறை வன்முறைகள் குறைக்க துவங்கப்பட்டது. பலர் இது வன்முறையை தூண்டும் செயல் என்றனர்.

ஆனால் இங்கு வரும் நபர்கள் ஒருமுறை உள்ளே சென்று கோவம் தணித்து கொண்டால் அவர்கள் மனநிலைசிறப்பாக மாறிவிடும் என்றார்.

மேலும் இங்கு பெரும்பாலும் 20 வயதிலிருந்து35 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகம் பேர் வருகின்றனர். அவரவர் வழங்கும் பணத்தை பொறுத்துபொருட்கள் வழங்கப்படுகின்றன.

அதாவது சிலருக்கு டி.வி, கிளாக், போன்ற பொருட்கள் தேவைபடும். சிலருக்கு பாட்டில்கள், பொம்மைகள் போன்றவை தேவைப்படும், அவரவர் விரும்புவது போல் பொருட்கள்இங்கு வழங்குகிறோம்.

அதனுடன் பாதுபாப்பு உடை மற்றும் சுற்றியல் அல்லது பேட் வழங்கப்படுவதாகவும்.இதுவரை 15,000க்கும் மேற்பட்ட பாட்டில்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும். மாதம் ஒன்றுக்குசுமார் 600க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்வதாக கூறினார்.

அங்கு வந்த பள்ளி மாணவி இது குறித்து கூறும்போது. என்னுடைய பள்ளியின் மீது உள்ள கோவத்தை தீர்க்க இங்கு வந்தேன். தற்போது மிகவும்ரிலாக்ஸாக உள்ளது என்றார்.

இது போன்ற கடை தற்போதுதான் சீனாவில் வர துவங்கி இருந்தாலும் இந்த முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.