கமல் நடிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இந்த படத்தில் ஊழலை ஒழிப்பது, அரசு அலுவலகங்களில் நடக்கும் லஞ்சம் போன்ற முறைகேடுகளை பற்றி தெளிவாக கூறியிருந்தார். கமல் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அப்போது இந்த படம் மூன்று தேசிய விருதுகள் பெற்றது. அந்த படத்தில் நடித்த கமல் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ படம் குறித்த தகவலை கமல்ஹாசன் மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் ராஜு ஆகியோர் வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து, இப்படத்தில் இருந்து தயாரிப்பாளர் ராஜு விலகி கொண்டார். பின்னர், 2.௦ பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்சன் ‘இந்தியன் 2’ படத்தை தயாரிக்க உள்ளது.
இதனிடையே, ‘இந்தியன் 2’ படத்தில் கமலுடன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் வயதான சேனாபதி கதாபாத்திரத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த இந்தியன் 2 படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரில், வர்மக்கலை முத்திரையான இருவிரல் ஆக்ரோஷத்துடன் நடிகர் கமலஹாசன் காட்சியளிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வரும், 18-ம் தொடங்கும் என்ற அறிவிப்ப்பும் வெளியாகியுள்ளது.
Indian 2…
Proud to be a part of @shankarshanmugh sir’s vision with Ulaganayagan @ikamalhaasan sir ???
Focus on from Jan 18 ???@LycaProductions
Happy Pongal to one and all ??? pic.twitter.com/33XuhuhDPF— Anirudh Ravichander (@anirudhofficial) January 14, 2019