பிரித்தானியாவில் 6 மாதத்தில் பெண் ஒருவர் 31 கிலோ எடை குறைத்தது எப்படி என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் Tameside பகுதியைச் சேர்ந்தவர் Laura-Beth(32).
செவிலியரான இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். முதலில் இவரின் size 18-ஆக இருந்தது. ஆனால் தற்போது அதை size 10-ஆக மாற்றி காண்பித்துள்ளார்.
அதாவது 6 மாதங்களில் 30 கிலோ எடையை குறைத்து காண்பித்துள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், உடல் எடை அதிகரிப்பால் சற்று வேதனையடைந்து வந்த Laura-Beth எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது தான் அவர் Slimpod app என்பதை பயன்படுத்தியுள்ளார். அதில் உடல் எடையை குறைப்பது எப்படி என்று ஒவ்வொரு நாளும் கவனித்து வந்துள்ளார்.
இதற்காக அவர் நாள் ஒன்றிற்கு வெறும் ஒன்பது நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியதாக கூறப்படுகிறது.
Laura-Beth-க்கு குழந்தை ஒன்று உள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், பல முறை நான் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்து வந்தேன். 12 வருடங்களுக்கு முன்பு சாதரணமாகவே இருந்தேன்.
அதன் பின் அளவுக்கு மீறிய உணவு பழக்கம் என் எடையை அதிகரித்துவிட்டது என்று கூறலாம்.
குறிப்பாக நான் கேட்பரி டெய்ரி மில்க், நொறுக்கு தீணிகள் அதிகம் சாப்பிடுவேன், என்னால் அதை நிறுத்த முடியவில்லை.
அதன் பின்பு Slimpod app பயன்படுத்த ஆரம்பித்தேன். அதில் சத்து மிக்க உணவு பொருட்களை எப்படி சாப்பிட வேண்டும்? தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற டயட் இருந்தது என்று கூறியுள்ளார்.
மேலும் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் Slimpod app-ஐ பயன்படுத்தி 90 சதவீதமான மக்கள் தங்கள் உடல் எடையை குறைத்துள்ளதாகவும், சர்க்கரையின் அளவும் முற்றிலும் குறைந்துவிடுவதாகவும், நொறுக்குத் தீணி பழக்கமும் குறைந்துவிடுவதாகவும் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.
Laura-Beth எடை குறைப்பதற்கு முன்பு தினமும் என்ன சாப்பிட்டுக் கொண்டிருந்தார்?
பிரேக் பாஸ் : தானிய உணவுகள் மற்றும் பிரட் ஜாம்
மதிய உணவு : சாண்ட்விச் அல்லது பிரட்
டின்னர் : பிட்சா
இனிப்பு பொருட்களில் சாக்லெட்களை அவர் அதிகம் உண்டு வந்துள்ளார். அது மிகப் பெரிய பிரச்சனை என்று கூறப்படுகிறது.
இப்போது Laura-Beth என்ன சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்?
பிரேக் பாஸ்ட் : முட்டை, வாழைப்பழம் மற்றும் பழங்கள்
மதிய உணவு : சிக்கன், சாலான், பாலாடை கட்டி
டின்னர் : வீட்டில் செய்யப்பட்ட பீட்சா