முகமாலையில் 10 ஆண்டு பின் தோன்றிய மாதா சிலை!

கிளிநொச்சியில் பத்து வருடங்களின் பின்னர் புதைந்து போயிருந்த மாதா சிலை ஒன்று காட்டில் இருந்து கிடைத்துள்ளது.

முகமாலையிலுள்ள மாதா தேவாலயத்தில் இருந்த உருவச் சிலையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போர் அனர்த்தம் காரணமாக முகமாலையில் உள்ள தேவாலயம் அழித்து போய்விட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதி மக்கள் இன்னமும் தங்கள் இடங்களுக்கு சென்று குடியேறாத நிலையில் அவர்கள் இடைக்கிடையே, சென்று தமது காணிகளை பார்த்து வருகின்றனர்.

இந்த வாரம் தங்கள் காணிகளை பார்ப்பதற்காக வந்த சந்தர்ப்பத்தில் சிலை போன்ற ஒன்றை அவதானித்துள்ளனர்.

அது அங்கிருந்த தேவாலயத்தின் மாதா சிலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. பின்னர் அந்த சிலை பாதுகாப்பாக காட்டுக்கு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சிலையை வைப்பதற்கு உரிய இடம் ஒன்றை நிர்மாணிக்கும் வரையில் அந்த சிலையை மரத்திற்கு கீழ் வைத்து பூஜை செய்வதற்கு முகமாலை மக்கள் தீர்மானித்துள்ளனர்.

இதனையடுத்து இதைப் பார்ப்பதற்கு அப் பகுதி மக்கள் படையெடுப்பதாக கூறப்படுகிறது.