ஒரே ஒரு கையெழுத்து! சர்ச்சையில் சிக்கிய யாஷிகா!

இந்திய ரூபாய் நோட்டில் கையெழுத்து போட்டதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்.

துருவங்கள் 16ல் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

சமீபத்தில் பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற யாஷிகாவை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டுள்ளனர்.

அப்போது பேப்பர் இல்லாத ரசிகர் ஒருவர், ரூபாய் நோட்டை நீட்ட அதில் ஆட்டோகிராப் போட்டுள்ளார்.

இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக சர்ச்சை எழுந்துள்ளது, ரிசர்வ் வங்கி கவர்னர் மட்டுமே கையெழுத்து போட அனுமதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.