சீனாவில் தமிழ் மொழி பயிலும் பல்கலை கழக மாணவிகள் சிலர் தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளனர்.
உழைக்கும் மக்களால் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி பொங்கல் எனப்படுகிறது.
தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் இந்த விழா, உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா ஆகும்.
தமிழ்நாடு, சீனா,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் திருநாளாக இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், சீனாவில் தமிழ் மொழி பயிலும் பல்கலை கழக மாணவிகள் சிலர் மிக உற்சாகமாக பொங்கல் கொண்டாடி வருகின்றனர். தற்போது, அதன் காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அவர்கள் தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளனர். அதில், வாழ்க தமிழ் வளர்க தமிழினம், தமிழர் பண்பாடுவியக்க வைக்கும் தமிழர் பண்பாடு என்று பதிவிட்டுள்ளார்.