பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களுக்கு அந்நாட்டு பிரதமர் தெரேசா மே தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாரிய வளர்ச்சிக்கு தமிழ் மக்களின் மகத்தான பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அயராத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, பெருந்தன்மை என்பன, நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப துணை புரிகிறது.
பிரித்தானியாவின் மூலை முடுக்கெங்கும் வாழும் தமிழ் மக்கள் சகல விடயங்களிலும் நாட்டிற்கு பங்களிப்பு வழங்கியதாகவும், அதற்காக இன்றைய நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எண்ணிக்கையில் தமிழ் மக்கள் குறைந்தளவாக காணப்பட்டாலும், அவர்களின் பங்களிப்பு மகத்தானதென பிரதமர் தெரேசா அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார்.