இயேசு கிறிஸ்துவிற்கு ரொனால்ட் மெக்டொனால்ட் என்ற நிறுவனத்தின் உடையை அணிவித்து காட்சிப்படுத்தியது பெரும் சர்ச்சையும் எதிர்ப்பும் கிளப்பி உள்ளது.
இஸ்ரேலில் உள்ள Haifa Museum of Art அருங்காட்சியகத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்ட சிலைக்கு ரொனால்ட் மெக்டொனால்ட் என்ற நிறுவனத்தின் வேடம் அணிவிக்கப்பட்டது போன்று பெயின்ட் செய்யப்பட்ட சிலை ஒன்று அமைக்கப்பட்டது.
இதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அருங்காட்சியகத்த நோக்கி நடத்தப்பட்ட போராட்டத்தில்பொலிசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 அதிகாரிகள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் ஒருவர் மதத்தை இழிவுப்படுத்துதல் கூடாதென்ற வாசகங்களுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த அருங்காட்சியக உரிமையாளர் கூறுகையில், நான் இது மதத்தை இழிவுப்படுத்த அமைக்கவில்லை என்றும், இந்த சிலை கடந்த நான்கு மாதங்களாக இங்குதான் இருக்கிறது.
ஆனால் இதை பார்க்க வந்த யாரோ ஒரு நபர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டதால் தான் பிரச்சனை ஆகிவிட்டது என்றார்.
மேலும் இந்த சிலையை தயாரித்த ஜானி லியோனன் என்ற நபரையே இதை எடுத்து செல்ல கூறி உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
போராட்டகாரர்களின் காட்சிக்கு இங்கு கிளிக் செய்யவும்