தமிழகத்தில் ஒசூர் பகுதியில் சொத்துக்காக 80 வயது தந்தையை நடுரோட்டில் தூக்கி வீசிய மகள் தனலெட்சுமி தனது செயல் எதனால் என்று விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் ஓசூர் பகுதியை சேர்ந்த தனராஜ் என்பவர் ஓய்வு பெற்றகாவல்துறை அதிகாரி. இவரது மனைவி இறந்த நிலையில் தனராஜ் தன் மகள் மற்றும் மருமனுடன்வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகள் தனலெட்சுமி மற்றும் மருமகன் பாலமுரளி ஆகியோர்,சொத்தை பிரித்து தரக்கூறி, தகராறில் ஈடுபட்டதாக வந்துள்ளனர்.
தொடர்ந்து மகள் மற்றும்மருமகன், தன்ராஜ்-யை தூக்கி வெளியில் வீசியதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோபரவி வந்தது. மேலும் அக்கம் பக்கத்தினர் பொலிசில் அளித்த தகவலின் பெயரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தனலெட்சுமி இன்று செய்தியாளர்களுக்குஅளித்த பேட்டியில் வீட்டில், தற்கொலை செய்து கொள்வேன் என்று தந்தை தொடர்ந்து மிரட்டிவந்தார் என்றும், சொத்து பிரச்சனை குறித்து உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்ற பின்பும் அந்த ஆவணங்களை தரமறுத்து வந்ததாகவும். எனவே தான் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.