பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்ட தந்தை!

மும்பை பவாய் பகுதியில் 3 மாதங்களாக பெற்ற மகளை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த 45 வயது தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 19 வயது பெண் மும்பையில் தன்னுடைய தாய் மற்றும் 17 மற்றும் 15 வயதுடைய சகோதரிகளுடன் வசித்து வருகிறார்.

கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 2 மணியளவில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப மகளை, அவருடைய தந்தை பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் படுத்துக்கொண்டிருந்துள்ளார். பின்னர் மீண்டும் திரும்ப 4 மணிக்கு வீடு திரும்பிய அவர், அருகாமையில் படுத்துக்கொண்டு மகளிடம் அத்துமீறியுள்ளார்.

இதனால் மனமுடைந்து அழுதுகொண்டிருந்த பெண், மாலை 5 மணிக்கு வீடு திரும்பிய தன்னுடைய தாயிடம் நடந்தவை பற்றி கூறியுள்ளார்.

இதனை பற்றி கணவரிடம் அந்த பெண்ணின் தாய் கேட்கும்போது, ஆத்திரமடைந்த அவர், மனைவி மற்றும் மகளை கடுமையாக தாக்கிவிட்டு கிளம்பியுள்ளார்.

இதனையடுத்து பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த நபரின் உதவியுடன் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், அந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.