தேங்காய் ஓட்டின் விலை இவ்வளவா???

அமேஷானில் பொருட்கள்விலைபட்டியலில் தேங்காய் ஓட்டின் விலையை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆன்லைன் பொருட்கள்வாங்கும் வழக்கம் சில ஆண்டுகளாக அதிகமாகி வருகின்றது. இதற்கு பெரும்பாலும் அமேஷான்,பிளிப்கார்ட் போன்ற உலகெங்கிலும் செயல்படும் ஆன்லைன் இணையங்களிலேயே பெரும்பாலும் மக்கள்பொருட்கள் வாங்க விரும்புகின்றனர்.

இது போன்ற இணையதளங்களில்மக்களுக்கு திருப்தி அளிக்கும் விஷயம், கூட்டத்தில் சென்று இடிபாடுகளிடையே சிக்க வேண்டாம்என்பதும். பொருட்களின் விலை, ஆப்பர் போன்ற பயன்பாடுகளும் பெரிய அளவில் கவருவதால் இந்தமுறையை பெரும்பாலும் தேர்வு செய்கின்றனர்.

ஆனால் தற்போதுஅமேஷான் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேங்காய்ஓட்டின் விலை அமைந்துள்ளது. அதாவது ஒரு தேங்காய் ஓடு 55 சதவீகித ஆபரில்1365.00 ரூபாய்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமேஷான் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

இதற்கு முன் அமேஷான்நிறுவனம் மாட்டு சாணத்திற்கும் இது போன்று அதிக விலை குறிப்பிட்டு ஒரு சர்ச்சை கிளம்பியதுஎன்பது குறிப்பிடத்தக்கது.