உயிரை அணு அணுவாய் கொள்ளும் நோய்களில் சக்கரை நோயும் ஒன்றாகும்.
இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது மற்றும் சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழத்தை உண்ணும் முன் அதன் GI குறியீட்டு எண்ணை (Glycemic Index) கண்டறிந்த பின் உண்ண வேண்டும்.
GI குறியீடு என்பது கிளைசீமிக் குறியீட்டைக் குறிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் 55 அல்லது அதற்கும் குறைவான அளவுள்ள குறியீட்டை கொண்ட பழங்களை உண்பது நல்லது.
ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய், ஆப்பிள் ஆகியவைகளில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக உட்கொள்ளலாம். இருப்பினும் சில பழங்களை தவிர்ப்பதே சிறந்ததாகும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- சக்கரை நோயாளிகள் மாம்பழம் மிகுந்த சர்க்கரை இருப்பதால் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து இதை உட்கொண்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும்.
- சப்போட்டா பழத்தில் GI குறியீட்டு எண் 55 க்கு மேலுள்ளதால் இது சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இப்பழத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது.
- திராட்சையில் நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. 3 அவுன்ஸ் கொண்ட திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
- அன்னாசியில் இப்பழத்தில் அதிக அளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால் இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
- ஆப்ரிக்காட் பழத்தின் கிளைசீமிக் குறியீட்டு அளவு 57 ஆக உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தையும் தவிர்க்க வேண்டும். அரை கப் ஆப்ரிக்காட் பழத்தில் 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
- அரை கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. அதன் GI 46 முதல் 70 வரை உள்ளது. முழுவதும் பழுத்த வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
- தர்பூசணியில் குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உடைய தர்பூசணி பழத்தில் சர்க்கரை மட்டும் 72 GI அளவிற்கு உள்ளது. இப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் அதிகமாக உள்ளன.
- பப்பாளியில் 59 GI உடைய இப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவு ஏறாத வன்னம் உண்ணுதல் உகந்தது.
- சர்க்கரை நோயாளிகள் கொடிமுந்திரி அறவே தவிர்க்க வேண்டும். இதில் 103 GI மதிப்பு கொண்ட இப்பழத்தில் கால் பங்கு அளவிலேயே 24 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.
- சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் இதையும் தவிர்க்க வேண்டும்.