யாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயின் தாக்கம் காரணமாக 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரும்பிராயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி இரணைமடுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற திரும்பிய பெண்ணுக்கு அன்றைய தினமே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
31ம் திகதி அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ம் சிகிச்சை பெறச் சென்ற வேளையில் மயங்கி வீழந்துள்ளனர். உடனடியாக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் உரிய சிகிச்சை வழங்கப்பட்ட போதும், கடந்த 13 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காய்ச்சல் குறித்து யாழ். குடாநாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளர்.