திருச்சி மாவட்டத்தில் கல்லூரி காதலர்கள் பொங்கல் தினமான நேற்று காதலர்கள் காட்டுப்பகுதியில் சந்தித்து பேசியபோது மர்மநபர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்வாணன் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் நர்ஸிங் படிக்கும் மாணவியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், பொங்கல் தினமான நேற்று இருவரும் மாலைப்பொழுதில் மலைமாத கோயிலுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்த காட்டுப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபோது இதனை காதலன் தடுக்க முயன்றுள்ளார். இதில், தமிழ்வாணன் கழுத்தில் கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு, காதலியை தனியாக தூக்கி சென்று நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.