ஓசூர் உழவர் சந்தை அருகே ஒரு குழந்தையை யாரோ ஒருவர் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் உழவர் சந்தை அருகே சாலை ஓரத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு சந்தையில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது அங்கு ஒரு அழகான குழந்தை இருத்தது தெரிய வந்தது.இதையடுத்து அங்கிருந்த பெண்கள் சிலர் அந்த குழந்தையை எடுத்து பாதுகாத்து வந்தனர். அங்கு விரைந்த பொலிஸார் குழந்தையை பத்திரமாக மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதேவேளை, பின்னர் அந்த குழந்தை காப்பகத்தில் விடப்பட்டுள்ளது. மேலும், பொலிஸார் அது யாருடைய குழந்தை என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக யார் இந்த நாசகர செயலை செய்தது என்று சமூகவாசிகள் திட்டி வருகின்றனர்.