அசைவம் சாப்பிடுவோர் கவனத்திற்கு!!

தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள்தான் முதலில் ஏற்படும். அதற்கு பிரியாணியும் விதிவிலக்கல்ல. ஆனால், பிரியாணி, இறைச்சி வகையாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும்.

தினமும் அசைவம் சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது அல்ல. தற்போதைய காலகட்டத்தில் எங்கு பார்த்தாலும் பிரியாணி கடைகள் தான் அதிகம் காணப்படுகிறது. ரோட்டுக் கடை முதல் மிகப்பெரிய ரெஸ்டாரண்ட் வரைக்கும் அசைவ விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது.

சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணியில் போடப்படும் இறைச்சிகள் கெட்டுப் போயிருந்தால், அதிலுள்ள கிருமிகள் பிரியாணியில் சேர்ந்துவிடும். இதனால் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு உடனடியாக வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உண்டாகும்.

முந்தய காலங்களில் வயதானவர்களுக்கு மட்டும் தான் செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது. ஆனால், தற்போது 10, 15 வயது நிரம்பிய சிறுவர்களுக்கே இது மாதிரியான பாதிப்புகள் உண்டாகிறது. தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதே அதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினந்தோறும் அசைவம் சாப்பிடும்பொழுது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்குவதால் உடல்பருமன் ஏற்பட்டு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்றவை ஏற்பட கூடும்.