வைரமுத்துவின் புகைப்படத்தை வெளியிட்டு வம்பிழுத்த சின்மயி!

கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசியருக்கான எம்.ஜி.ஆர். சிவாஜி விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை சுஹாசினி மற்றும் ராகவா லாரன்ஸ் வழங்க வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

வைரமுத்து விருது வாங்கிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட சின்மயி, எம்.ஜி.ஆர். சிவாஜி விருதுகள் PRO stalwarts ஒருங்கிணைக்கிறது. நான் உண்மையில் இந்த விருதினை மதிக்கிறேன்.

கடந்த ஆண்டு சிறந்த பாடல் வரிகளில் அதிகம் பாடல்கள் வெளிவந்தன. நான் பாடிய 96 படத்திற்காக இதனை சொல்லவில்லை. ஆனால் என்று குறிப்பிட்டு டிஸ்லைக் எமேஜியை பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது ஏற்புடையதல்ல என்று மறைமுகமாக சாடியுள்ளார்.

ஏற்கனவே, மீடூ வாயிலாக வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி சின்மயி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.